நெல்லையில் போட்டியிடுகிறாரா தமிழிசை செளந்திரராஜன்? நயினார் நாகேந்திரன் நிலை என்ன?

Siva
செவ்வாய், 19 மார்ச் 2024 (08:51 IST)
கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறிய நிலையில் அவர் நெல்லை அல்லது கன்னியாகுமரி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு விருப்பமான தொகுதி கன்னியாகுமரி என்றும் இரண்டாவது ஆப்ஷனாக நெல்லையை அவர் பாஜக மேலிடத்தில் கூறியுள்ளதாகவும் இந்த இரண்டு தொகுதிகளும் கிடைக்காவிட்டால் தென் சென்னை தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே ரிசர்வ் செய்து வைத்திருப்பதாகவும், அதேபோல் நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நெல்லை மற்றும் கன்னியாகுமரி தொகுதி கிடைக்காவிட்டால் தென்சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது

ஆனால் நெல்லை தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால் தமிழிசை சௌந்தரராஜன் வேட்பாளர் ஆனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என பாஜக மேலிடம் திட்டமிட்டு இருப்பதாகவும் எனவே நெல்லையில் அவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் நயினார் நாகேந்திரன் தற்போது எம்எல்ஏவாக இருப்பதால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றும் அதுமட்டுமின்றி தேவையில்லாமல் ஒரு இடைத்தேர்தலுக்கு வழிவகுத்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது

எனவே நெல்லையில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் அவரது வெற்றியும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்