இன்று கெட் அவுட் சொல்வார்கள்.. நாளை கட்-அவுட்டுக்கு போய்விடுவார்கள்: விஜய் குறித்து தமிழிசை

Siva

வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (17:46 IST)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கெட் அவுட் என்ற ஹேஷ்டேக் அறிமுகம் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், “இன்று கெட் அவுட் சொல்பவர்கள் நாளை கட்-அவுட் வைக்கச் சென்று விடுவார்கள்,” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
திமுகவை கெட் அவுட்  என்று சொல்லலாம், ஏனெனில் அந்தக் கட்சி தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. ஆனால், பாஜக பல மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, மத்தியிலும் ஆட்சி செய்கிறது. “அதை எப்படி கெட் அவுட் என்று விஜய் சொல்ல முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
“இன்று கெட் அவுட்  என்று கூறிக்கொண்டு நடிப்பவர்களே, நாளை கட் அவுட் வைத்து அரசியலை விட்டுவிடுவார்கள். தமிழக மக்கள் குறித்து கவலைப்படாமல், திரைத்துறைக்கே சென்று விடுவார்கள். எனவே, மக்கள் அவர்களை கெட் அவுட் என்று சொல்லிவிட்டு, நல்ல கட்சியை ஆதரிக்க வேண்டும்,” என்று தமிழிசை தெரிவித்தார்.
 
அத்துடன், “அரசியலில் முக்கியத்துவம் பெறவில்லை என்றால், விஜய் தானாகவே மீண்டும் நடிக்க சென்று விடுவார்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்