காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்; ஒப்புக்கொண்ட தமிழிசை

வெள்ளி, 11 மே 2018 (12:56 IST)
காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளார்.

 
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 
 
ஆனால் மத்திய கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாஜக காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம். கர்நாடக தேர்தலுக்காக உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டோம். இதுபோன்ற அரசியலை அனைத்து கட்சிகளும் செய்கிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழிசை கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்