இதைத் தொடர்ந்து அங்கு பிரச்சாரம் களை கட்ட தொடங்கியது. பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல், காங்கிரஸுக்கு ஆதரவாக சித்தராமய்யா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
செல்லும் இடமெங்கும் காங்கிரஸை கடுமையாக தாக்கி மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கு சித்தராமய்யா பதிலடி கொடுத்தார். அதேபோல், கர்நாடகாவின் அடிப்படை பிரச்சனைகளை மோடி நிராகரிப்பதாக ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார்.