விஜயேந்திரர் பொதுவிழாவுக்கு செல்லக்கூடாது; காட்டுக்குள் போய் தனியாக வாழ வேண்டும்!

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (17:30 IST)
காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து இன்னமும் பேசி வருகின்றனர்.
 
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியான நிலையில் இருந்தார் என சங்கர மடம் சார்பாக விளக்கம் அளித்தும் சர்ச்சை தொடர்கிறது. காரணம் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் ஏன் தியானத்தில் இருக்காமல் எழுந்து நின்றார் என பதில் கேள்வி எழுகிறது.
 
இந்நிலையில் விஜயேந்திரர் தியான நிலையில் இருந்தது குறித்து பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்த தமிழருவி மணியன் பதிலளித்துள்ளார்.
 
அதில், அடிக்கடி தன்வயம் இழந்து தியானத்துக்குள் சென்றுவிடக்கூடியவர், எந்தப் பொதுவிழாவுக்கும் செல்லக்கூடாது. எல்லா நேரத்திலும் தியானம் செய்யக்கூடியவர் மாபெரும் துறவியாக காட்டுக்குள் போய் தனியாக உட்காரவேண்டும் என்றார்.
 
மேலும் நாட்டு மக்களிடையே வாழக்கூடியவர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் தியானத்தில் ஈடுபட வேண்டும். பொதுவிழாவுக்கு வரும் நேரங்களில் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும். மனிதனுக்கு முக்கியமானது விழிப்பு உணர்வு. இந்த விழிப்பு உணர்வினைத் தூண்டுவதுதான் தியானம் என குறிப்பிட்டார் தமிழருவி மணியன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்