இதில் பேசிய அவர், ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவரது உருவம் உகுலைந்து இருந்தது. உயரம் குறைந்துவிட்டது. கடைசி நாளில் அவரது காரில் இருந்து கூட அவரால் இறங்க முடியவில்லை. சசிகலாவை அழைத்து வர சொன்னவர் தனது காலை அவரிடம் காட்டினார்.
தனது கால் ஷூவில் சுற்றியிருந்த புடவையை கூட அவரால் எடுக்க முடியாத நிலையில் இருந்தார். தனியாக நடக்க முடியாமல் சசிகலாவின் தோளில் கையைப்போட்டபடி ஜெயலலிதா வீட்டிற்குள் சென்றார். மேலும் தலைமைச் செயலகத்தில் முக்கியமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தன்னையும் மறந்து ஜெயலலிதா தூங்கிவிட்டார் என தெரிவித்தார்.