சென்னை ஐஐடி.,யில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் சமஸ்கிருதப்பாடல் பாடியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைப் பெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பொதுவாக தமிழகத்தில் எந்தவொரு விழா நடைபெற்றாலும் முதலில் தமிழத்தாய் வாழ்த்து பாடுவது மரபு. ஆனால், இந்த நிகழ்ச்சியில் சமஸ்கிருத இறை வணக்க பாடல் பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சமபவம் குறித்து வைகோ, முத்தரசன், பழ. நெடுமாறன், திருமுருகன் காந்தி உள்ளிடோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.