பள்ளிகளில் வேதியல் இயற்பியலுக்கு ஆய்வகங்கள் இருப்பது போல் முதன் முதலாக தமிழ் ஆய்வகம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியை மாணவர்கள் ஆர்வத்தோடு பயிலும் வண்ணம் மென்பொருள் கருவிகள், தமிழ் சொல் மற்றும் இலக்கண விளையாட்டுகள், தமிழ் வழியாக உலக அறிவு, பாடல்கள், கதைகள், நூல்கள், போட்டிகள் என்று இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளனர்.