நடிகை கௌதமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்திருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவருக்கு முக்கிய பொறுப்பொன்றை அளித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை கௌதமி பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். ஆனால், அண்மையில், பாஜகவில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் என்ற பொறுப்பை வழங்கியுள்ளார்.
அதே நேரத்தில், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலியும், விவசாய பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசியும் நியமிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கௌதமிக்கு அதிமுகவில் இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த பொறுப்பை திறம்பட மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.