கோடைக்கால விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயில்கள்: சென்னை-நெல்லை ரயில் குறித்த விவரங்கள்..!

Mahendran

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (13:05 IST)
கோடைக்கால விடுமுறையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைக்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். 
 
மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும்/
 
இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் சொந்த ஊர் செல்பவர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்