தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
வியாழன், 2 ஜனவரி 2025 (13:57 IST)
தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் அதிகாலை பனிமூட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் உரை பனி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை தமிழகத்தில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஜனவரி 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளிலும் உள் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 4ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்