திங்கள் முதல் தமிழகத்தில் ரயில் சேவை: ரயில் விவரங்கள் உள்ளே!!

சனி, 30 மே 2020 (08:26 IST)
ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்திற்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது, இதனால் பொதுச்சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு நாளையோடு முடியவுள்ள நிலையில் ஜூன் 1 ஆம் தேதி ம்ஜ்தல் சிரப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. முதலில் தமிழகத்திற்கு ரயில் சேவை வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கோரியிருந்ததால் ஜூன் 1 தமிழகத்திற்கு சிறப்பு ரயில் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால் தற்போது தமிழக அரசு சிறப்பு ரயில் சேவையை கோரியதால் தமிழகத்தில் 4 பகல் நேர ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இதன்படி இயங்கும் ரயில்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில்
2. மதுரை - விழுப்புரம் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்
3. திருச்சி - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்
4. கோயம்புத்தூர் - காட்பாடி இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்