அசானி புயல் உருவாகுவதால் தமிழகத்தில் மழை நிலவரம் எப்படி?

திங்கள், 21 மார்ச் 2022 (08:33 IST)
வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் 24 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தகவல்.

 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டது என்பதும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக மாற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயலுக்கு அசானி புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அசானி புயல் காரணமாக அந்தமான் பகுதியில் கனமழை பெய்து வருவதால் அந்தமானில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து வெளியான அறிவிப்பில், புயல் காரணமாக தரைக்காற்று உறிஞ்சப்பட்டு தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. எனவே அதன் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 24 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்