அடுத்த 24 மணி நேரத்தில் மழை: எங்கெங்கு தெரியுமா??

Webdunia
சனி, 2 மே 2020 (15:07 IST)
24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். 
இதை தவித்து மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்