உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச. முதல் வாரத்தில் மழை!!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (07:58 IST)
அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 
 
வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வேளாண் நிலங்கள், பயிர்கள் வீணாகின. இந்நிலையில் தற்போது வங்க கடலில் அந்தமான் தீவுப்பகுதிக்கு தெற்கே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
 
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 30-ம் தேதி (நாளை மறுதினம்) மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வரும் 1, 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்