தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை!

சனி, 12 பிப்ரவரி 2022 (13:24 IST)
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட கடலோர மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்