தமிழ்நாடு ஆசிரியர் கல்வி தேர்வு ( B.ed) முடிவுகள் வெளியானது..

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (19:35 IST)
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி (   B.ed) ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பட்டதாரி ஆசிரியர் கல்வி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளதால், தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மூலமாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் (பிஎட் ) பெருமளவில் மாணவ, மாணவிகள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.  இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 
 
மேலும், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள tnteu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை எப்படி பெறுவது ?
 
*தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) ன் tnteu.ac.in என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.
 
*பின்னர்,  TNTEU B.Sc B.Ed March result 2019 என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்
 
* தேர்வு முடிவுகளின் பக்கம் தோன்றும்
 
*அதில், தேர்வர்கள் தங்கள் எண்ணைப் பதிவு செய்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து  கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்