குத்துச்சண்டை போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றி-சீமான் பாராட்டு

Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (13:56 IST)
இந்திய தலைநகர் டில்லியில் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில்,  12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பன்னாட்டு குத்துச்சண்டை போட்டி  நடைபெற்றது. இதில்,தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்  அன்பு தங்கப்பதக்கமும்,  தர்கேஷ், அபிஷேக், சிங்கத் தமிழன் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், சஞ்சய் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

இவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் பதக்கம் வென்ற் மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

''இந்திய தலைநகர் டில்லியில் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற மாணவ மாணவியரில் கோவையைச் சார்ந்த அன்பு பிள்ளைகள் மன்சார் தங்கப்பதக்கமும், தர்கேஷ், அபிஷேக் மற்றும் சிங்கத்தமிழன் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், சஞ்சய் அவர்கள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கமும் வென்ற செய்தியறிந்து பேருவுவகையும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன். தங்களின் அயராத முயற்சியாலும், கடுமையான உழைப்பாலும் பதக்கம் வென்று பெற்றோருக்கும், பிறந்த இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஐவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
 
ஐவரின் தனித்திறனைக் கண்டறிந்து, மெருகேற்றி முறையான பயிற்சியளித்து பதக்கம் வெல்ல காரணமாக திகழும்  பயற்சியாளர் அன்புத்தம்பி ஆன்ட்லி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்