தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கப்படுகிறதா? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

Siva
வியாழன், 3 அக்டோபர் 2024 (15:46 IST)
தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கப்பட இருப்பதாகவும், இது குறித்த முக்கிய முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று மது ஒழிப்பு மாநாடு நடந்த நிலையில், மதுவை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் எண்ணம் என திருமாவளவன் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் எட்டாம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும், விரைவில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழகத்தில் 4829 மதுக்கடைகள் உள்ள நிலையில், 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அமைச்சரவை கூட்டங்கள் முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், படிப்படியாக மது கடைகளை குறைப்பது நல்ல முடிவு என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்