"புதிய அமைச்சரவை பட்டியல்" - உதயநிதிக்கு 3-வது இடம்.!

Senthil Velan

திங்கள், 30 செப்டம்பர் 2024 (20:26 IST)
புதிய அமைச்சரவை பட்டியலில் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
 
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேற்று புதிய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.  துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் புதிய அமைச்சரவை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரண்டாவது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இடம் பெற்றுள்ளனர்.
 
அமைச்சரவையில் நான்காவது இடத்தில் கே.என்.நேருவும், ஐந்தாவது இடத்தில் ஐ.பெரியசாமியும், ஆறாவது இடத்தில் பொன்முடியும் இடம்பெற்றுள்ளனர். ஏழாவது இடத்தில் எ.வ.வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


ALSO READ: “தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்” - உதயநிதி துணை முதல்வரானது குறித்து இபிஎஸ் கிண்டல்..!
 
சிறையில் இருந்து ஜாமீனில் வந்து அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செந்தில் பாலாஜிக்கு 21-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. டி,.ஆர்.பி.ராஜாவுக்கு 33 வது இடமும், கயல்விழி செல்வராஜ் 35 வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்