கோடை விடுமுறையை ஒட்டி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதேபோல், கோடை வாசஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் அதிகமான பயணிகள் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.