ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் 28,540 ஏடிஎம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 27,945 ஏடிஎம்களும், மூன்றாம் இடத்தில் உத்தரபிரதேசத்தில் 23,460 ஏடிஎம்கள் உள்ளனவாம். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த வரிசையில் கர்நாடகா, மேற்கு வங்கம், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.