சென்னை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் விரைவு!

புதன், 16 மார்ச் 2022 (15:40 IST)
சென்னை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் விரைவு!
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை அண்ணா நகர் 5வது அவென்யூவில் தனியார் வங்கி ஒன்றும் அதே கட்டிடத்தில் ஐடி அலுவலகம் ஒன்றும் இயங்கி வந்தது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக போலீசாரும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 முதல்கட்டமாக வங்கி மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரையும் காப்பாற்றும் பணியில் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்