திராவிடம் என்றால் தமிழ் என சுருக்கப்பட்டுள்ளது : கவர்னர் ஆர்.என். ரவி

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (14:35 IST)
திராவிடம் என்றால் தமிழ் என சுருக்கப்பட்டுள்ளது என கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் கூறியுள்ளார். 
 
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கவர்னர் ஆர்.என். ரவொ கலந்து கொண்டார். அதில் அவர் பேசியபோது, ‘தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கு ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கியது என்றும் ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்படும் அளவிற்கு சுருக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் 
 
பாரதம் என்ற சொல் ஆங்கிலேயர்கள் இந்தியா என்று பெயர் வைப்பதற்கு முன்னதாகவே வந்துள்ளது என்றும் பாரதியாரின் பாடல்களில் பாரதம் என்று உள்ளது என்றும் இந்தியா என்பது அனைவருக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ஒற்றுமை என்றும் அவர் கூறியுள்ளார்
 
ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவை ஒன்றிணைத்தது என கூறுவதில் உண்மை இல்லை என்றும் இந்தியா என்பது ஒருவர் ஆட்சியின்கீழ் எப்போதும் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்