வெளிநாடு செல்வதால் எந்த முதலீடுகளும் வராது: ஆளுநர் ஆர்.என்.ரவி

செவ்வாய், 6 ஜூன் 2023 (07:41 IST)
வெளிநாடு செல்வதால் ஒரு மாநிலத்திற்கு எந்த முதலீடுகளும் வராது என தமிழக கவர்னர் ரவி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உதகை பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது நான் கேட்பதாலோ அல்லது நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் பேசுவதாலோ எந்தவித முதலீடும் வராது என்றும் வெளிநாடு செல்வதால் முதலீடு வந்ததாக இதற்கு முன் எந்த முன் உதாரணமும் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
வெளிநாடு சென்று முதலீடுகளை திரட்டுவதற்கு பதிலாக உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் அவ்வாறு உருவாக்கினால் தானாகவே முதலீடுகள் வந்து குவியும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்று தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை திரட்டியதாக கூறப்படும் நிலையில் தமிழக ஆளுநரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்