ஆளுனர் - அமித்ஷா சந்திப்பு.. ஒரே நாடு ஒரே தேர்தலால் திமுக அரசுக்கு ஆபத்தா?

ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (10:37 IST)
தமிழக ஆளுநர் ரவி இன்று திடீரென டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
திமுக அரசுக்கு எதிராக ஏற்கனவே  கருத்துக்களை தெரிவித்து வரும் ஆளுநர்  சில முக்கிய கோப்புகளை அமித்ஷாவிடம் கொடுத்திருப்பதாகவும் இதனால் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தினால் திமுக அரசு கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழகத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 
 
தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடந்தால் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும்? சாதக பாகங்கள் என்ன? என்பது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்