மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (16:58 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமத்திற்கு  காரணம் தமிழக அரசு தான் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்,  இன்று மக்களவையில்  பேசிய  மத்திய   நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமதத்திற்கு தமிழக அரசு தான் காரணம். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதம் ஆகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை   மத்திய அரசு கட்டிக் கொடுப்பதால்  தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். இந்தியா முழுவதும் 508 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்த மத்திய அரசு அறிவித்த நிலையில், அதில் 76 ரயில் நிலையங்கள் தென்னிந்தியாவில் உள்ளது என்றும், இதற்காக ரூ.2286  கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.'' என்று கூறினார்.

இந்த நிலையில், மக்களவையில் மதுரை எய்ம்ஸ் குறித்த மத்திய அமைச்சர் சீதாராமனின் பேச்சுக்கு திமுக எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்து,  மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிய நடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்