இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்: மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

Siva
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (07:14 IST)
இன்று தமிழக அமைச்சரவை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கும் நிலையில், இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்தார் என்பதும், அதனை அடுத்து செந்தில் பாலாஜிக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.

அமைச்சரவையில் நடந்த மாற்றத்திற்கு பிறகு, இன்று 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் (அமெரிக்க பயணம்) குறித்த ஆலோசனைகள், விளக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிதி சார்ந்த திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல், தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் இருக்கும் நிலையில், அவற்றில் 500 கடைகளை குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது."


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்