நாளை ஓசூர் வரை மட்டுமே செல்லும்.. தமிழக போக்குவரத்து துறை தகவல்..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (18:03 IST)
நாளை கர்நாடக மாநிலத்தில் பந்து அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்லும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
தமிழக எல்லைப் பகுதி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கர்நாடகாவில் மீண்டும் நாளை பந்த் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
 
மேலும் பெங்களூர் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே செல்லும் என்றும், இன்று இரவு வரை மட்டுமே கர்நாடக மாநிலத்திற்கு உள்ளே சென்று வரும் வகையில் தமிழக பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்