6 மணி நேரத்திற்கு கன மழை: அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

வெள்ளி, 4 டிசம்பர் 2020 (08:58 IST)
தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
தமிழகத்தில் இன்று புரெவி புயல் கரையை கடக்கும் நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மயிலாடுதுறை, ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டியில் அதிக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 
 
தேனாம்பேட்டை, சென்னை அண்ணா சாலை, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், திநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. 
 
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்