தண்ணீர் பிரச்சனையை உடனடியாக தீர்ப்பேன்: தாம்பரம் மேயர் உறுதி

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (18:58 IST)
தண்ணீர் பிரச்சனையை உடனடியாக தீர்ப்பேன்: தாம்பரம் மேயர் உறுதி
தாம்பரம் பகுதியில் தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் அந்த பிரச்சனையை முதலாவதாக தீர்ப்பேன் என தாம்பரம் மேயராக பதவி ஏற்ற வசந்தகுமாரி தெரிவித்துள்ளார்.
 
மெட்ரோ லாரிகளில் வரும் தண்ணீரை தான் தாம்பரம் பகுதி மக்கள் குடிக்கிறார்கள் என்று கேன் தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்கள் தான் இங்கு அதிகம் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறிய மேயர் வசந்தகுமாரி எனவே தாம்பரம் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் தண்ணீர் லாரி வரவில்லை என்றால் அந்த பகுதி மக்களுக்கு ஒரு நாள் முழுவதும் வீணாகிவிடும் என்றும் அதனால் மெட்ரோ லாரி தினசரி ஒவ்வொரு பகுதிக்கும் வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் வசந்தகுமாரி தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்