ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தவருக்கு ஆணுறை அனுப்பி ஸ்விகி! – அதிர்ச்சியில் கஸ்டமர்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (13:33 IST)
ஸ்விகியில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறை டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் ஸ்விகி, சொமாட்டோ, டன்சோ என பல உணவு டெலிவரி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகின்றன. தற்போது இது மேலும் வளர்ந்து மளிகை பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட பலவும் இவ்வாறு ஆன்லைன் மூலமாகவே டெலிவரி செய்யப்படுகின்றன.

சிலசமயங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக தவறாக வேறு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டு விடுவதும் உண்டு. கோயம்புத்தூரில் அவ்வாறாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒருவர் தனது குழந்தைகளுக்காக ஐஸ்க்ரீம் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை ஸ்விகியில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவற்றுக்கு பதிலாக அவருக்கு ஆணுறை டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் தவறாக டெலிவரி செய்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஸ்விகி நிறுவனம் அவரது பணத்தை திரும்ப அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்