போலீசாரையே அலற வைத்த சுவாதி கொலையாளி ராம்குமார்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (07:22 IST)
சுவாதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கொலையாளி ராம்குமார், போலீசாரையும் அலறவைத்துள்ளார்.
 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதி கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி யார் என தெரியாமல் காவல்துறை தடுமாறியது.
 
இந்த நிலையில், கொலையாளியை பிடிக்க பல்வேறு கோணங்களில் முயன்ற காவல்துறைக்கு வெற்றி கிடைத்தது. இதனையடுத்து, நெல்லையில், ராம்குமார் எந்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
 
இதனயைடுத்து, ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
ராம்குமார் தற்கொலைக்கு முயன்று அதில் வெற்றி பெற்று இருந்தால், போலீசார் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை அடைந்து இருக்கும். போலீசாரின் நுணுக்கமான செயல்பாடுகளால் ராம்குமார் காப்பாற்றப்பட்டார். மேலும், தமிழக காவல்துறை மீது இருந்த அவ நம்பிகை துடைக்கப்பட்டது. 
அடுத்த கட்டுரையில்