இந்த நிலையில் டிக்கெட் விலை உயர்வு, சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி ஆகியவை தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவும் இரவு 11 மணிக்கு பின்னர் தியேட்டருக்கு அனுமதிக்க கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தெலுங்கானா மாநில அரசுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.