சீனாவிடம் எச்ச சோறு சாப்பிடும் நீயெல்லாம்...? எஸ்வி சேகரின் கடுமையான விமர்சனம்

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:30 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒருபுறம் அரசும் மக்களும் போராடி வரும் நிலையில் இன்னொரு புறம் ஒரு சிலர் தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் கதிரேசன் என்பவர் அவ்வப்போது மத்திய மாநில அரசுக்கு எதிராக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இதுவரை அவர் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டில் கூட மத்திய அரசின் நடவடிக்கைகளையோ அல்லது மாநில அரசின் நடவடிக்கையையோ பாராட்டியது கிடையாது என்றும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் 
 
ஏதாவது ஒரு குறை சொல்வதாகவே அவர் டுவிட்டர் பக்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின்  மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முடிவெடுத்தது குறித்து அருணன் கதிரேசன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டுவிட் பின்வருமாறு: ‘பதிலடி கொடுப்போம்" என்று இந்தியாவை மிரட்டியிருக்கிறார் டிரம்ப். ஒரு சங்கி தலைவரும் பொங்கவில்லையே! இவர்களது தேசம் இந்தியாவா? அமெரிக்காவா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், ‘நீங்கள் நம் இந்திய உப்பு போட்ட சோத்தை திங்கிறவனா இருந்தா பொங்கியிருப்பீங்க. சைனா எச்சி மிச்சம் சாப்டு வாழற ஓசி சோறு பொங்குவிங்களா? . பாரதி சொன்ன கூட்டத்துல ஒருத்தன் பேசற மாதிரி, இல்ல ,சொந்தமா லூசு மாதிரி பேசிகிட்டே இந்திய துரோகியா வாழற திருட்டுத்தனம் உங்களுக்கே சொந்தம்’ என்று கூறியுள்ளார். எஸ்வி சேகரின் இந்த டுவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்