ஜெ. வீடியோ; சரவணா ஸ்டோர் பொம்மை ஞாபகம் வருகிறது: எஸ்.வி.சேகர் டுவீட்!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (17:31 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வீடியோ இன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரபல நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் இந்த வீடியோவில் ஜெயலலிதா இருப்பதை சரவணா ஸ்டோர் வாசலில் கும்பிடும் பொம்மையுடன் ஒப்பிட்டுள்ளார்.

 
இது தொடர்பாக அவர் டுவிட்டரில், இந்த வீடியோவை பார்க்கும்போது ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் வாசலில் கும்பிடும் பொம்மை ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. அதிமுகவின் உச்ச கட்ட அனாகரீக அரசியல் போர். இழப்பு ஆட்சிக்கும் கட்சிக்கும் சேர்த்து அடிக்கப்படும் சாவு மணி. மொத்தமா முடிச்சாச்சு என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்