முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய நடிகர் சூர்யா

வியாழன், 4 நவம்பர் 2021 (20:28 IST)
நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாய மக்களின் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாய மக்களுக்கு இன்று முதல்வர் இலவச வீட்டு மனை வழங்கினார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதில், எளிய மக்களின் மாண்புமிகு தமிழக முதல்வர்@mkstalin அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய  நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை அளித்துள்ளது…எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்