நீங்கள் வகுத்த பாதை…கமலுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

செவ்வாய், 2 நவம்பர் 2021 (15:59 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் நல்ல வரவேற்பை பெற்று டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், #JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் எனத் தெரிவித்தார்.

இதற்கு சூர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி! எனத் தெரிவித்துள்ளார்.
 

நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது!
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்