தடா போட்ட தமிழக அரசு: பாராட்டி மகிழ்ந்த முக்கிய நடிகர்கள்!!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (12:25 IST)
Actor Suriya and Actor Dhanush

கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் பொதுத்தேர்வு ரத்து முடிவை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர். 
 
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இது ஆசிரியர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
பலர் இந்த தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் பொதுத்தேர்வு நடைபெறும் என அதற்கான பணிகள் தொடர்ந்து வந்த நிலையில், தமிழக அரசு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. 
 
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த முடிவினை எட்டியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சினர் வரவேற்பை கொடுத்துள்ளனர். அதேபோல மாணவர்கள் அவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகம்  மற்றும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
இதேபோல கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரும் அரசின் இந்த முடிவை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர். வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், 
 
பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை நீக்கிய அரசுக்கு நீக்கமற நன்றி. பட்டாம்பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். 
 
அதேபோல நடிகர் தனுஷ், 5 ஆம் மற்றும்  8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது.இது குழந்தைகளுக்கு மன அழுத்தத்திலிருந்தும் , பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும் . வாழ்த்துக்கள்.. நன்றி! என பதிவிட்டுள்ளார். 
 
இதேபோல நடிகர் சூர்யாவும், மாணவர்களின் கற்றல் திற்னை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 ஆம் மற்றும்  8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது  கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசிற்கும் நன்றிகள்... என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்