அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான விசாரணை: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

Mahendran

திங்கள், 18 மார்ச் 2024 (17:35 IST)
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் குறித்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
கடந்த 2008-ம் ஆண்டு  வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில் ருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தார். மேலும் இந்த வழக்கில்   நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
 
மேலும், தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஐ பெரியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் தடை விதிக்க முடியாது என 
உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 
ALSO READ: 10 ஆண்டுகளாக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத 2 மாநிலங்கள்.. காங்கிரஸ் கட்சியின் பரிதாபம்..!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்