பொன்முடி மீதான தண்டனைக்கு இடைக்கால தடை: சபாநாயகர் அப்பாவு முக்கிய ஆலோசனை

Siva

செவ்வாய், 12 மார்ச் 2024 (08:08 IST)
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு  வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்த நிலையில் அவரது எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு முக்கிய ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது

இந்த நிலையில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறை செல்வது தவிர்க்கப்பட்டுள்ளதால் அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது

ஆனால் அதே நேரத்தில் அவர் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அண்மையில் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு வந்துள்ளதால் அவர் மீண்டும் எம்எல்ஏ பதவியில் நீடிக்க முடியும் என்று கூறப்படுகிறது

இந்நிலையில் இது குறித்து சட்டப்பேரவை செயலக அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்