சர்ச்சை நடிகைக்கு திருமணம்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (08:44 IST)
மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சுஜிபாலா.



 



இவர், அய்யா வழி, சந்திரமுகி, கலவரம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மேலும், உண்மை என்ற படத்தில் நாயகியாகவும் நடித்திருகிறார்.

உண்மை என்ற படத்தில் இவர் நடிக்கும் போது, அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாருடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்துக் கொண்டார், பின் அத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இந்நிலையில், அவர், ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் என்பவரை நேற்று திடீரென்று திருமணம் செய்துக்கொண்டார். சுஜிபாலாவின் சொந்த ஊரான நாகர்கோவிலில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் சுஜிபாலாவின் குடும்பத்தினரும், நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

பிரனேஷ், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு கத்தார் நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்