மூளையில் 9 செ.மீ குச்சியுடன் வாழ்ந்த இளைஞன்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (08:37 IST)
அமெரிக்காவில் உள்ள சீன உணவகத்தில் நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டு இருந்தபோது இடையே ஏற்பட்ட சண்டையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.


 
 
அதில் ஒருவர் சாப்பிட பயன்படுத்தும் மூங்கிலால் ஆன, சப் ஸ்டிக்கினால் மற்றொருவரின் கண்களில் குத்தியுள்ளார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள், ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
 
அதில், அவருடைய மூளையில் 9 செ.மீ அளவில் அந்த குச்சி இருந்தது. இந்த குச்சியானது உடைந்து மூளையில் சிக்கியிருந்தது. இப்படி மூளையில் 9 செ.மீ அளவுக்கு குச்சி சிக்கியிருந்தும் அவர் உயிரோடு இருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் அந்த குச்சியானது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அடுத்த கட்டுரையில்