குறை சொன்ன வானதி வாயை அடைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் !

Webdunia
திங்கள், 31 மே 2021 (10:24 IST)
மத்திய அரசிடம் இருந்து பாரபட்சம் இல்லாமல் தடுப்பூசிகளை பெற்றுத்தாருங்கள் என வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில். 

 
சென்னையில் வெகுவாகக் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கோயம்புத்தூரில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். 
 
இதனிடையே, கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, வானதி சீனிவாசனுக்கு கோவை மக்கள் மீது உண்மையான அக்ககறை இருந்தால் கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து பாராபட்சம் இல்லாமல் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, தமிழகத்திற்கு மத்திய அரசு சரியான அளவில் தடுப்பூசியை ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தின் மக்கள் தொகை கணக்கின்படி 10 சதவீதம் மட்டுமே தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், குஜராத் உள்ளிட்ட ஒருசில பாஜக ஆளும் மாநிலங்களில் 20 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்