கடந்த 1991 ஆம் ஆண்டு திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு அதன் பிறகு நடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது என்றும் அந்த வழியை திமுக பின்பற்ற விரும்புகிறதா என்றும் சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்புகிறார்.
கவர்னர் விவகாரத்தில் திமுக அத்துமீறி நடந்து வருவதாக பாஜக கூறிவரும் நிலையில் சுப்ரமணியசாமி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு நான் கேபினட் அமைச்சராக இருந்தபோது திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு வழிநடத்தினேன். திமுக அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோல்வி அடைந்தது.
அதை தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. அதேபோல் தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் இந்த வழியை பின்பற்ற விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுப்பிரமணியசாமியின் இந்த ட்விட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.