நீட் எதிர்ப்பு மாணவர்கள் போராட்டம்: சுப்பிரமணியன் சுவாமி என்ன சொல்கிறார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (16:34 IST)
தமிழக அரசியல் குறித்தும், தமிழக பிரச்சனைகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்துவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, இந்தியா முழுக்க எல்லா மாநிலத்திலும் நீட் இருக்கிறது. தமிழ்நாடு மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்று யோசிக்க வேண்டும். கடந்த முறை ஓர் ஆண்டுக்கு மட்டும்தான் நீட் விலக்கு வேண்டும் என்று சொன்னார்கள்.
 
அப்போதே எங்களுக்கு நீட் தேவையில்லை என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், சொல்லவில்லை. இப்போது நீட் தேர்வைத் தள்ளிப்போட்டாலும் யாராவது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் அது ரத்தாகிவிடும். அதனால், இந்தப் போராட்டம் எல்லாம் கால விரயம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்