சென்னை சேப்பாக்கம் அருகே மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென அவர்கள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்து அதனை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் செயல்பட்டதால் அந்த பகுதியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தலைமைச்செயலகம் நோக்கி செல்ல முயற்சிக்கும் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்