தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வ.உ. சிதம்பரனார் கல்லூரி வாசல் முன் திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி போராட்டம் செய்து வருகின்றனர். இதனை அறிந்த மற்ற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மிண்டும் ஒரு மெரீனா போராட்டம் போன்ற ஒரு போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.