மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (22:16 IST)
மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில்  செப்டம்பர் 1  ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நாளை முதல் செப்டம்பர் 1 ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டுமெனப் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் கூறியுள்ளது.

மேலும்,  மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்