கோமாவுக்கு சென்ற மாணவனை பேசியே பிழைக்க வைத்த ஆசிரியர்கள்: சினிமாவை மிஞ்சும் நிஜசம்பவம்

வியாழன், 19 ஜூலை 2018 (07:00 IST)
சினிமாவில் தான் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டால் அவருடைய உறவினர்கள் அல்லது நண்பர்கள் காதருகே பேசி பிழைக்க வைக்கும் காட்சிகள் இருக்கும். ஆனால் இப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டை அருகே நடந்துள்ளது.
 
புதுக்கோட்டை பட்குதியை சேர்ந்த 17 வயது அருண்பாண்டியன் என்ற மாணவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர், கோமா நிலையில் இருந்த அருண்பாண்டியன் காதில் பேசினர். உனக்கு ஒன்றும் இல்லை, நாங்கள் இருக்கின்றோம், நீ உடனே வகுப்பு வா, பாடம் நடத்த வேண்டும், படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மாறி மாறி பேசினர். இந்த பேச்சை கேட்டு முதலில் கண்களை உரூட்டிய அந்த மாணவர், பின்னர் கை, கால்களை லேசாக அசைத்தார். தற்போது அந்த மாணவரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பேசியே மாணவரை பிழைக்க வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்